Ethanol Blended Petrol (EBP) – வரையறை
எத்தனால் என்பது உயிரி எரிபொருள் (Biofuel). பெட்ரோலுடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்படுகிறது. இந்தியா தற்போது E20 (20% எத்தனால் + 80% பெட்ரோல்) இலக்கை அடைந்துள்ளது.
- கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தல்
- ஆற்றல் பாதுகாப்பை மேம்படுத்துதல்
- விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல்
- கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல்
- புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களை ஊக்குவித்தல்
நன்மைகள்
- கச்சா எண்ணெய் இறக்குமதி குறைகிறது
- விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம்
- கார்பன் வெளியேற்றம் குறைகிறது
- Stubble Burning (2G) குறைவு
சவால்கள்
- கச்சா விலை குறைந்தாலும் நுகர்வோர் அதிக விலை செலுத்துகின்றனர்
- மைலேஜ் தூய பெட்ரோலை விட குறைவு
- கரும்பு அதிக நீர் மற்றும் உரம் தேவைப்படுகிறது
- அனைத்து விவசாயிகளுக்கும் சமநன்மை கிடைப்பதில்லை
கரும்பு சார்ந்த சிக்கல்கள்
- அதிக நீர் தேவைப்படும் பயிர் – நீர் பற்றாக்குறை மாநிலங்களில் பயிரிடப்படுகிறது
- மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற நீர் தட்டுப்பாட்டு மாநிலங்களில் அதிகம் பயிரிடல்
- ஒரே மூலப்பொருளின் மீது அதிக சார்பை உருவாக்குகிறது
- உணவுப் பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்பு பாதிக்கப்படும் வாய்ப்பு
மாற்று மூலப்பொருட்கள்
- மக்காச்சோளம்
- சேதமடைந்த தானியங்கள் & உபரி அரிசி
- இனிப்பு சோளம் (Sweet Sorghum)
- சிறுதானியங்கள்
- வேளாண் கழிவுகள் (நெல் தாள், கோதுமை தாள்)
2G Ethanol – நன்மைகள்
- உணவுப் பயிர்களுடன் போட்டியிடாது
- Stubble Burning-ஐ குறைக்கிறது
- சுற்றுச்சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது
- பல்வேறு மூலப்பொருட்களிலிருந்து எத்தனால் உற்பத்தியை அதிகரித்தல்
- 2G எத்தனால் ஆலைகளை விரிவுபடுத்துதல்
- வேளாண் கழிவுகளை சேகரிக்கும் கட்டமைப்பை உருவாக்குதல்
- நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்துதல்
- விவசாயிகளும் நுகர்வோரும் சமநலன் பெறும் விலைக் கொள்கையை உருவாக்குதல்
Prelims முக்கிய தகவல்கள்
1. கரும்பு இந்தியாவில் எத்தனால் தயாரிப்பிற்கான முக்கிய மூலப்பொருளாகும்.
2. 2G எத்தனால் முக்கியமாக வேளாண் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
3. எத்தனால் கலப்பு கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பைக் குறைக்க உதவுகிறது.
மேலுள்ள கூற்றுகளில் சரியானது எது?
சரியான விடை: D — 1, 2 மற்றும் 3
- கூற்று 1 – சரி – கரும்பு இந்தியாவில் எத்தனால் தயாரிப்பிற்கான முக்கிய மூலப்பொருளாகும்.
- கூற்று 2 – சரி – 2G எத்தனால் Lignocellulosic biomass மற்றும் வேளாண் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
- கூற்று 3 – சரி – EBP Programme கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து ஆற்றல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
Mains வினா — 10 மதிப்பெண்கள்
மாதிரி விடை
அறிமுகம்: EBP திட்டம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் தொடங்கப்பட்டது. இந்தியா E20 இலக்கை அடைந்துள்ளது.
நன்மைகள்: கச்சா எண்ணெய் இறக்குமதி குறைகிறது; பசுமைக்குடில் வாயு குறைகிறது; விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம்; 2G Ethanol மூலம் Stubble Burning குறைவு.
சவால்கள்: கரும்பின் மீது அதிக சார்பு – நீர் மற்றும் உர பயன்பாடு அதிகம்; குறைந்த மைலேஜ்; உணவுப் பயிருடன் போட்டி; நுகர்வோர் அதிக விலை; அனைத்து விவசாயிகளுக்கும் சம நன்மை இல்லை.
முடிவு: ஆற்றல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், விவசாயிகள் நலன் மற்றும் நுகர்வோர் நலன் அனைத்தையும் சமநிலைப்படுத்தும் வகையில் இந்தியாவின் எத்தனால் கொள்கை மேம்படுத்தப்பட வேண்டும்.